ஃபிஷ் பிரியாணி

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 45 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 5970
Likes :

Preparation Method

  • மீன் துண்டுகளுடன் 1 தேக்கரண்டி மஞ்சள்தூள், 2 தேக்கரண்டி தனியாத்தூள், இஞ்சி—பூண்டு அரைத்தது, சோம்புத்தூள், தயிர், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு இவற்றைக் கலந்து, தனியே ஊற வைக்கவும்.
  • 2 பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பூண்டை நறுக்கிக் கொள்ளவும்.
  • தண்ணீரில் 1 துண்டு பட்டை, 10 மிளகு, 6 கிராம்பு, 2 ஏலக்காய், அன்னாசிப்பூ, சோம்பு, பிரியாணி இலை, 3 சிட்டிகை மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு இவற்றை சேர்த்து, அரிசியையும் கலந்து வேக வைக்கவும்.
  • அரிசி குழைந்து விடாமல் கவனமாக பார்த்துக் கொள்ளவும்.
  • தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 200 மில்லி லிட்டர் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு, பொரித்து, எடுத்து தனியே வைக்கவும்.
  • வேறு வாணலியில் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு சிவக்க, வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
  • தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, 1 துண்டு பட்டை, 6 கிராம்பு, 4 ஏலக்காய், கறிவேப்பிலை போட்டு, தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் வெங்காயம், நறுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி, பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் புதினா, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் கரம்மஸாலாத்தூள், மிளகாய்த்தூள், ஜாதிக்காய் பொடி, 3 சிட்டிகை மஞ்சள்தூள், 2 தேக்கரண்டி தனியாத்தூள் இவற்றைப் போட்டு வதக்கவும்.
  • அனைத்தும் நன்றாக கலந்து வதங்கியதும் இறக்கி வைக்கவும்.
  • வேக வைத்துள்ள சாதம், பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகள் இவற்றை வதக்கிய கலவையுடன் சேர்த்து, அதன்பின் பொரித்து வைத்துள்ள வெங்காயத்தையும் போட்டு மெதுவாக கிளறி, மூடி வைத்து, தேவையான  போது எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Biryani Recipes

  • மட்டன் பிரியாணி

    View Recipe
  • எறா பிரியாணி

    View Recipe
  • ஃபிஷ் பிரியாணி

    View Recipe
  • சிக்கன் பிரியாணி

    View Recipe
  • உருளைக்கிழங்கு—மட்டன் பிரியாணி

    View Recipe
  • ஜவ்வரிசி தோசை

    View Recipe
  • வெஜிடபிள் பிரியாணி

    View Recipe
  • பனீர் பிரியாணி

    View Recipe
  • காலிஃப்ளவர் பட்டர்பீன்ஸ் பிரியாணி

    View Recipe
  • ஸோயா பிரியாணி

    View Recipe
Engineered By ZITIMA