நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்து, நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தாளின் பச்சை நிறப் பகுதியை 1 அங்குலத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பனீர் / டோபு துண்டுகளைப் போட்டு அதிகம் சிவக்காமல் லேஸாக வறுத்துக் கொள்ளவும். இவற்றில் இருந்து 3 துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.
வேறொரு வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்கவும்.
கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் போட்டு வதக்கவும்.
கோழிக்கறித் துண்டுகள் வெந்து நன்றாக வதங்கியதும் வேக வைத்துள்ள ரைஸ் நூடுல்ஸைப் போட்டுக் கிளறவும்.
வெல்லத்தூள், ஃபிஷ் ஸாஸ், புளித் தண்ணீர் இவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
அனைத்தும் நன்றாகக் கலந்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
அழகிய பரிமாறும் தட்டில் எடுத்து இதன் மீது தனியாக எடுத்து வைத்துள்ள டோஃபு / பனீர் துண்டுகளையும், வெள்ளரித் துண்டுகளையும் பரவலாகப் போட்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
ரைஸ் நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்து கண் மதிப்பாக நமக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம்.
Fish Sauce கிடைக்காவிட்டால் லோயா ஸாஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
Fish Sauce சேர்த்து தயாரிப்பதாக இருந்தால் உப்பு சேர்க்கத் தேவை இல்லை. அல்லது உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் மட்டுமே சேர்க்க வேண்டும்.