பன்றி இறைச்சியை மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் (Bowl) ஆய்ஸ்ட்டர் ஸாஸ், ஸோயா ஸாஸ், 1 மேஜைக்கரண்டி சர்க்கரை, 1 மேஜைக்கரண்டி மிளகுத்தூள் இவற்றை போட்டு, இறைச்சி துண்டுகளைப் போட்டு 20 நிமிடங்கள் ஊற விடவும்.
அதன்பின் அவன்—ல் (Oven) 20 நிமிடங்கள் க்ரில் (Grill) செய்து, எடுத்துக் கொள்ளவும்.
வேறு பாத்திரத்தில் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தண்டு, எலுமிச்சைச்சாறு, மீதமுள்ள மிளகுத்தூள், மீதமுள்ள சர்க்கரை, மா இஞ்சி, ஃபிஷ் ஸாஸ் இவற்றைப் போட்டுக் கலந்து க்ரில் செய்த இறைச்சி துண்டுகளைப் போட்டு புரட்டி விடவும்.
10 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.
ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.