Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 2941 Likes :
Ingredients
ஸீ பாஸ் மீன் துண்டுகள் 600 கிராம்
மரவள்ளிக்கிழங்கு மாவு 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 6
சிகப்பு மிளகாய் 4
பச்சை மிளகு 3 சிறு கொத்து
நறுக்கிய நார்த்தங்காய் இலை 2 மேஜைக்கரண்டி
மிளகு 1 மேஜைக்கரண்டி
ஃபிஷ் ஸாஸ் 1 மேஜைக்கரண்டி
சர்க்கரை (Sugar) 1 அரை தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்
Preparation Method
ஸீ பாஸ் மீனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மீனின் சதையை எடுத்தபின் உள்ள முழுப்பகுதியை (அடிபாகத்தை) தனியாக எடுத்து வைக்கவும்.
மீன் துண்டுகளுடன் மர வள்ளிக்கிழங்கு மாவு, உப்புத்தூள் சேர்த்து புரட்டி எடுத்து வைக்கவும்.
பச்சை மிளகு, பெரிய கொத்தில் இருந்து 3 சிறு கொத்துக்களாக எடுத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய் இவற்றை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டு, பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
அதே எண்ணெய்யில் மீனின் அடிப்பகுதியை முழுதாக போட்டு மொறு மொறுப்பாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
வேறு வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பச்சை மிளகாய், மிளகு, சிகப்பு மிளகாய், பச்சை மிளகு, நார்த்தங்காய் இலை போட்டு மொறு மொறுப்பாக வறுத்து, பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு 1 நிமிடம் வதக்கி, ஃபிஷ் ஸாஸ், சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.
ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.
பரிமாறும் பெரிய தட்டில் பொரித்த மீனின் அடிப்பகுதியை வைத்து, இதன் மீது பொரித்து வைத்துள்ள பச்சை மிளகாய், சிகப்பு மிளகாய், பச்சை மிளகு, நார்த்தங்காய் இலை, பொரித்த மீன் துண்டுகள் கலந்த கலவையைப் பரவலாகப் போட்டு பரிமாறவும்.