சிக்கன் ரைஸ் நூடுல்ஸ்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 2914
Likes :

Preparation Method

  • தண்ணீரைக் கொதிக்க வைத்து இறக்கி ரைஸ் நூடுல்ஸைப் போட்டு 15 நிமிடங்கள் ஆன பின் வடிகட்டி வைக்கவும்.
  • பனீர் / டோபுவை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  • வெங்காயம், பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கோழிக்கறியை நீள நீளமாக சற்று மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு, பரபரப்பான தூளாக்கிக் கொள்ளவும்.
  • நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்து, நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தாளின் பச்சை நிறப் பகுதியை 1 அங்குலத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பனீர் / டோபு துண்டுகளைப் போட்டு அதிகம் சிவக்காமல் லேஸாக வறுத்துக் கொள்ளவும். இவற்றில் இருந்து 3 துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.
  • வேறொரு வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்கவும்.
  • கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் போட்டு வதக்கவும்.
  • கோழிக்கறித் துண்டுகள் வெந்து நன்றாக வதங்கியதும் வேக வைத்துள்ள ரைஸ் நூடுல்ஸைப் போட்டுக் கிளறவும்.
  • வெல்லத்தூள், ஃபிஷ் ஸாஸ், புளித் தண்ணீர் இவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
  • முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாகக் கிளறவும்.
  • சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கவும்.
  • வேர்க்கடலைத்தூள் சேர்த்துக் கிளறவும்.
  • வெங்காயத்தூள் சேர்த்து கிளறவும்.
  • வறுத்து வைத்துள்ள டோபு / பனீர் துண்டுகளைப் போட்டுக் கிளறவும்.
  • அனைத்தும் நன்றாகக் கலந்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
  • அழகிய பரிமாறும் தட்டில் எடுத்து இதன் மீது தனியாக எடுத்து வைத்துள்ள டோஃபு / பனீர் துண்டுகளையும், வெள்ளரித் துண்டுகளையும் பரவலாகப் போட்டு அலங்கரித்துப் பரிமாறவும்.
  • ரைஸ் நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்து கண் மதிப்பாக நமக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம்.
  • Fish Sauce கிடைக்காவிட்டால் லோயா ஸாஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
  • Fish Sauce சேர்த்து தயாரிப்பதாக இருந்தால் உப்பு சேர்க்கத் தேவை இல்லை. அல்லது உப்பு சரிபார்த்து தேவைப்பட்டால் மட்டுமே சேர்க்க வேண்டும்.

Choose Your Favorite Thai Recipes

  • க்ரீன் கறி பேஸ்ட்

    View Recipe
  • ரெட் கறி பேஸ்ட்

    View Recipe
  • யெல்லோ கறி பேஸ்ட்

    View Recipe
  • ஃபான்னேங் கறி பேஸ்ட்

    View Recipe
  • தாய் யெல்லோ சிக்கன் கறி

    View Recipe
  • க்ரீன் கறி சிக்கன்

    View Recipe
  • ரெட் கறி வாத்து

    View Recipe
  • ரெட் கறி—சிக்கன்

    View Recipe
  • ஸ்வீட் அன் சோர் ஸ்டிர்ட் ப்ரான்ஸ்

    View Recipe
  • சால்மன்

    View Recipe
  • ஸ்டிர்ட் க்ராப் இன் கறி ஸாஸ்

    View Recipe
  • சிக்கன் ரைஸ் நூடுல்ஸ்

    View Recipe
  • நண்டு ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • சிக்கன் ஸாஸேஜ் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • ஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)

    View Recipe
  • ஸ்டிர்—ஃப்ரைட் ஃபிஷ் வித் சைனீஸ் ஸிலேரி

    View Recipe
  • ஃப்ரைட் ஸீ பாஸ் வித் க்ரன்ச்சி ஹெர்ப்ஸ்

    View Recipe
  • பன்றி இறைச்சி ரோஸ்ட்

    View Recipe
  • தாய் கார்ன்—வேர்க்கடலை டிக்கி

    View Recipe
Engineered By ZITIMA