Preparation Time: 5 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 3906 Likes :
Ingredients
வஞ்சர மீன் துண்டுகள் (ஒவ்வொன்றும் 180 கிராம் எடை உள்ளது) 2
வெண்ணெய் (Unsalted Butter) 3 மேஜைக்கரண்டி
கோக்கனட் க்ரீம் 1 கப்
ரெட் கறி பேஸ்ட் (Red Curry Paste) 2 மேஜைக்கரண்டி
ஃபிஷ் ஸாஸ் 1 மேஜைக்கரண்டி
பனங்கற்கண்டு 1 தேக்கரண்டி
நார்த்தங்காய் இலை (நறுக்கியது) 2 மேஜைக்கரண்டி
பழுத்த சிகப்பு மிளகாய் 1
துளசி இலை சிறிதளவு
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அகன்ற வாணலியில் வெண்ணெய் மற்றும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தீயை மிதமாக்கி, மீன் துண்டுகளைப் போட்டு லேஸாக சிவந்த நிறம் வந்ததும் இறக்கி, தனியே வைக்கவும்.
வேறு வாணலியில் கோக்கனட் க்ரீம் போட்டு ரெட் கறி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
பனங்கற்கண்டு, ஃபிஷ் ஸாஸ் சேர்க்கவும்.
உப்பு சரிபார்க்கவும்.
ஒரு பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும் (Serving Bowl).
நார்த்தங்காய் இலை மற்றும் மிளகாய், துளசி இலை இவற்றைப் போட்டு பொரித்த மீன் துண்டுகளை கலந்து பரிமாறவும்.
ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.