Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 2943 Likes :
Ingredients
ரெட் கறி பேஸ்ட் 4 சிட்டிகை
தேங்காய்ப்பால் 4 கப்
வாத்துக்கறி துண்டுகள் 500 கிராம்
சிகப்பு மிளகாய் 3
பேபி தக்காளி 8
லிச்சி அல்லது டின்களில் விற்கப்படும் லிச்சி அரை கப்
நார்த்தங்காய் இலை 4
ஃபிஷ் ஸாஸ் (Fish Sauce) 2 மேஜைக்கரண்டி
பனங்கற்கண்டு (Palm Sugar) 1 தேக்கரண்டி
துளசி இலை 4
உப்பு 2 சிட்டிகை
இதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
Preparation Method
வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ரெட் கறி பேஸ்ட் போட்டு கிளறி, கறித்துண்டுகளைப் போட்டு சிவக்க வதக்கி, எடுத்து தனியே வைக்கவும்.
வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் 1 கப் தேங்காய்ப்பால் ஊற்றி, நன்றாக கொதிக்க விடவும்.
எண்ணெய் மிதக்க ஆரம்பித்ததும் கறித்துண்டுகளைப் போட்டு 1 நிமிடம் கொதித்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி சூடேற்றவும்.
மீதமுள்ள தேங்காய்ப்பாலை ஊற்றவும்.
கொதித்ததும் சிறிதளவு தண்ணீர், பேபி தக்காளிகள், லிச்சி துண்டுகள், நார்த்தங்காய் இலை, ஃபிஷ் ஸாஸ், பனங்கற்கண்டு இவற்றைப் போட்டு கலந்து விடவும்.
ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.
உப்பு, இனிப்பு சரிசமமாக இருப்பது போல சரி பார்த்துக் கொள்ளவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து, துளசி இலை மற்றும் இரண்டாகக் கீறிய சிகப்பு மிளகாய்கள் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.