Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 25 நிமிடங்கள்
Hits : 2852 Likes :
Ingredients
ஆப்பிள் 2 சர்க்கரை (Sugar) 1 மேஜைக்கரண்டி + 2 கப் பாதாம்பருப்பு 15 பால் அரை கப் + 2 கப் குங்குமப்பூ 2 சிட்டிகை நெய் 2 மேஜைக்கரண்டி நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் தேவையான அளவு
Preparation Method
ஆப்பிளை தோல் நீக்கி துறுவிக் கொள்ளவும்.
பாதாம்பருப்பை ஊற வைத்து தோல் நீக்கிய பின் ½ கப் பாலுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் ஆப்பிள் துறுவல் மற்றும் 1 மேஜைக்கரண்டி சர்க்கரை 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும். வேக வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
அரைத்த பாதாம்பருப்பு—பால், குங்குமப்பூ இவற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றவும்.
3 நிமிடங்கள் கொதித்ததும் வேக வைத்துள்ள ஆப்பிள் கலவையைப் போட்டு, கிளறுவதை நிறுத்தாமல் கிளறவும்.