Preparation Time: 2 மணி 30 நிமிடங்கள் Cooking Time: 40 நிமிடங்கள்
Hits : 3213 Likes :
Ingredients
கடலைப்பருப்பு 500 கிராம்
பெரிய வெங்காயம் 7
பூண்டு 6 பல்
தக்காளி 400 கிராம்
சிகப்பு மிளகாய் 5
இஞ்சி 1 அங்குலம்
சோம்பு 1 தேக்கரண்டி
ஏலக்காய் 3
பட்டை 1
கிராம்பு 3
பொரிகடலை 1 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 6
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்
Preparation Method
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக ஆட்டி, உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஆட்டி வைத்துள்ள கடலைப்பருப்பில் சிறு உருண்டைகள் செய்து, எண்ணெய்யில் போட்டுப் பொரித்து (Deep Fry) எடுத்து தனியே வைக்கவும்.
பொரிகடலையை வறுத்துக் கொள்ளவும்.
2 வெங்காயம், இஞ்சி, 4 பூண்டு, சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய், பட்டை, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, வறுத்த பொரிகடலை, இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியை சுடு தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து, ஆறியதும் தோல் நீக்கி, மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
மீதமுள்ள வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.