Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 6959 Likes :
Ingredients
ரவை 4 கப்
நெய் 1 கப்
கடுகு 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 4
இஞ்சி 1 அங்குலம்
முந்திரிப்பருப்பு 10
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
உப்பு தேவையான அளவு
தயிர் 2 கப்
இதயம் நல்லெண்ணெய் தேவையான அளவு
Preparation Method
வாணலியில் நெய் ஊற்றி லேசாக காய்ந்ததும் ரவையைப் போட்டு வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
முந்திரிப்பருப்பை உடைத்து நெய்யில் வறுத்து, எடுத்து வைக்கவும்.
இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை வட்ட வடிவமாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, இஞ்சி போட்டு வதக்கி இறக்கி வைத்துக் கொள்ளவும். தாளித்து, வதக்கிய பொருட்கள், வறுத்த ரவை, உப்பு, தயிர், முந்திரிப்பருப்பு இவற்றை கலந்து கொள்ளவும்.
இட்லி தட்டுகளில் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, ரவா இட்லி மாவில் இருந்து எடுத்து இட்லிகளாக ஊற்றி, வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
ரவையை இட்லிக்காக கலக்கும் போது மொத்தமாக எல்லா ரவையையும் கலக்காமல் ஒரு தடவை வேக வைப்பதற்கு தேவையான அளவு மட்டும் கலந்து கொள்ளவும்.