Preparation Time: 40 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 8754 Likes :
Ingredients
பச்சரிசி 2 கப்
தேங்காய்த்துறுவல் 6 மேஜைக்கரண்டி
சர்க்கரை (Sugar) தேவையான அளவு
Preparation Method
அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி, அரிசியை துணியில் போட்டு உலர்த்திய பிறகு, மாவாக்கிக் கொள்ளவும்.
மாவை இட்லி பாத்திரத்தில், ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த மாவை பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
புட்டுக் குழாயில் சிறிதளவு தேங்காய்த்துறுவல், இதன் மீது சிறிதளவு சர்க்கரை, இதன் மீது சிறிதளவு அரிசி மாவு போடவும்.
இவ்விதம் ஒன்றன் மீது ஒன்றாக மாறி, மாறி புட்டுக் குழாயை நிரப்பிக் கொள்ளவும்.
புட்டுக் குழாயின் பானையில் 1 கப் தண்ணீர் ஊற்றி இதன் மீது மாவுக் கலவை நிரப்பிய புட்டுக் குழாயைப் பொருத்தி, மூடி ஸ்டவ்வில் வைத்து சூடேற்றவும்.
7 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை கொதித்ததும், புட்டுக் குழாயின் மூடியிலுள்ள ஓட்டையின் வழியே ஆவி வெளிவரும்.
அப்போது புட்டுக்குழாயை எடுத்து மூடியைத் திறந்து குழாயின் பின்பக்கமிருந்து கரண்டியின் பின் பகுதியால் (கரண்டிக்காம்பால்) வெந்திருக்கும் புட்டை மெதுவாக ஒரு தட்டில் தள்ளவும்.
தள்ளும்போது, புட்டுக் குழாயை சாய்வாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.