· வஞ்சிர மீன் துண்டுகள் 500 கிராம்
· புளி எலுமிச்சை அளவு
· சின்ன வெங்காயம் 20
· தக்காளி 1
· மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
· பூண்டு 8 பல்
· மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
· செட்டிநாடு மஸாலா பொடி 4 தேக்கரண்டி
· கடுகு 1 தேக்கரண்டி
· சீரகம் 1 தேக்கரண்டி
· வெந்தயம் அரை தேக்கரண்டி
· கறிவேப்பிலை 1 ஆர்க்கு
· உப்பு தேவையான அளவு
· இதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
சுத்தம் செய்த மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்
புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்
வெங்காயம், பூண்டு, தக்காளி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் போட்டு, தாளிக்கவும்.
அதன்பின் வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்.
வதங்கியபின் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கும் போதே 2 தேக்கரண்டி செட்டிநாடு மஸாலா பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
மஸாலா வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றவும்.
தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்.
கொதித்து, ஓரளவு கெட்டியானதும் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக போடவும்.