அடப் பிரதமன்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 8524
Likes :

Preparation Method

  • தண்ணீரை கொதிக்க வைத்து, இறக்கி அரிசி அடா துண்டுகளைப் போட்டு 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • அதன்பின் தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
  • வடித்ததும் குளிர்ந்த தண்ணீரில் அரிசி அடாவைப் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இதனால் அரிசி அடா ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.
  • முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸை நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • 1 கப் தண்ணீரில் வெல்லத்தை கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
  • 3 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, அரிசி அடாவைப் போட்டு லேஸாக வறுத்து, எடுத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் வெல்லக் கரைசலை ஊற்றி, கொதித்ததும் மிதமான தீயில் வைத்து வறுத்து வைத்துள்ள அடாவைப் போடவும்.
  • அதன்பின் முதல் தேங்காய்ப்பால் ஊற்றவும்.
  • ஓரளவு கெட்டியானதும் இரண்டாம் தேங்காய்ப்பால் இறக்கியபின் வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ், ஏலக்காய் பொடி, தேங்காய் துண்டுகள் போட்டு கலந்து, பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA