கொத்துக்கறி—பட்டாணி (கீமா—மட்டர்)

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4933
Likes :

Preparation Method

  • கொத்துக்கறி தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறுப்பு ஏலக்காய், பிரியாணி இலை, இவற்றை போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • 5 நிமிடங்கள் வதக்கியதும் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு 3 நிமிடங்கள் வதக்கியபின் கொத்துக்கறி மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • அதன்பின் மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கிளறி, தக்காளி சேர்த்து 4 நிமிடங்கள் வதக்கவும்.
  • வதக்கியபின் தயிர் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறவும்.
  • உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
  • மூடி வைத்து, கொத்துக்கறி வெந்ததும் பட்டாணி போட்டுக் கிளறவும்.
  • பட்டாணி வெந்ததும் கரம்மஸாலாத்தூள் மற்றும் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Hyderabad Recipes

  • ஹைதராபாத் ஸ்பெஷல் ஃபலூடா

    View Recipe
  • ஆந்திரா கோழி வெள்ளை புலவு

    View Recipe
  • கொத்துக்கறி—பட்டாணி (கீமா—மட்டர்)

    View Recipe
  • ஹைதராபாத் சிக்கன் 65

    View Recipe
  • ஆந்திரா கோழிக்கறி குழம்பு

    View Recipe
  • ஹைதராபாத் லோக்மி

    View Recipe
Engineered By ZITIMA