Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 15 நிமிடங்கள்
Hits : 2651 Likes :
Ingredients
எள்ளு 100 கிராம்
புளி 1 கோலி அளவு
சிகப்புமிளகாய் 6+1
வெல்லம்(தூளாக்கியது) 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு அரைதேக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
உப்பு தேவையானஅளவு
இதயம்நல்லெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
Preparation Method
வாணலியை காய வைத்து எள்ளு, 6 மிளகாய் இவற்றை வறுத்து எடுத்து, அரைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, கறிவேப்பிலை, மீதமுள்ள 1 மிளகாய் இவற்றைப் போட்டு வதக்கியபின் புளிக்கரைசல், வெல்லம், உப்பு சேர்த்து கொதித்ததும் அரைத்த எள்ளு — மிளகாய் கலவையை சேர்த்து கிளறவும்.
மிதமான தீயில் 5 நிமிடங்கள் வைத்திருந்து, இறக்கி பரிமாறவும்.