Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 3518 Likes :
Ingredients
கத்தரிக்காய் 250 கிராம்
புளி 1 கோலி அளவு
பூண்டு 8 பல் + 3 பல்
தக்காளி 2
தேங்காய்த்துறுவல் 3 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
பட்டை 1 துண்டு
சீரகம் அரை தேக்கரண்டி
மிளகு அரை தேக்கரண்டி
தனியா 2 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
வெங்காயம் 1
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
உப்புதேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 50 மில்லி லிட்டர்
Preparation Method
கத்தரிக்காயின் காம்பை நீக்காமல் கத்தரிக்காயின் பின்பக்கம் வரை நீளமான கீறல்கள் போட்டுக் கொள்ளவும்.
பட்டை, மிளகு, சீரகம், தனியா இவற்றை வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த பொருட்களுடனன் 8 பல் பூண்டு, தேங்காய்த்துறுவல், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் இவற்றுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையை கத்தரிக்காயின் உள்பக்கம் வைத்து, நிரப்பவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மீதமுள்ள பூண்டு இவற்றை போட்டு வதக்கி, மஸாலா நிரப்பியுள்ள கத்தரிக்காயைப் போட்டு மூடி வைக்கவும்.
அவ்வப்போது திறந்து, மெதுவாக கிளறி விடவும்.
கத்தரிக்காய் வெந்து, மஸாலா கெட்டியாகி சிவக்க வதங்கியதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, போட்டு தாளித்து, கத்தரிக்காய் கலவையில் சேர்த்து கிளறி பரிமாறவும்.