Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 3307 Likes :
Ingredients
கோதுமை
மாவு 200
கிராம்
வெல்லம்(தூளாக்கியது) 2
கப்
ஏலக்காய்பொடி 1
தேக்கரண்டி
பொடியாகநறுக்கியகொப்பறைதேங்காய் 2
மேஜைக்கரண்டி
முந்திரிப்பருப்பு 15
கசகசா 1
மேஜைக்கரண்டி
நெய் 2
மேஜைக்கரண்டி
உப்புத்தூள் 1
சிட்டிகை
Preparation Method
அகலமான
பாத்திரத்தில் கோதுமை மாவு,
உப்புத்தூள்,
சிறிதளவு
தண்ணீர் சேர்த்து கெட்டியாக
பிசைந்து மூடி வைக்கவும்.
வாணலியில்
நெய் ஊற்றி,
காய்ந்ததும்
கொப்பறை தேங்காய் துண்டுகள்,
முந்திரிப்பருப்பு,
கசகசா
இவற்றை வறுத்து எடுத்து
வைத்துக் கொள்ளவும்.
பிசைந்து
வைத்துள்ள மாவில் உருண்டைகள்
செய்து,
அதன்பின்
பூரிப்பலகை மீது வைத்து
வட்டமாக தேய்த்து அதன்பின்
கத்தியால் மெல்லிய,
நீள
துண்டுகளாக (நூடுல்ஸ்
போல)
நறுக்கி
வைத்துக் கொள்ளவும்.
அதன்பின்
நறுக்கி வைத்துள்ள (நூடுல்ஸ்
போன்ற)
நீளத்துண்டுகளுடன்
சிறிதளவு அரிசி மாவு கலந்து
குலுக்கி விட்டுக் கொள்ளவும்.
(இதனால்
ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.)
அடி
கனமான பாத்திரத்தில் 3
கப்
தண்ணீர் ஊற்றி,
கொதித்ததும்
வெல்லத்தூளைப் போட்டு கிளறவும்.
மிதமான
தீயில் வைத்து ஓரளவு கெட்டியானதும்
நறுக்கி வைத்துள்ள கோதுமை
மாவு நீளத்துண்டுகளைப்
போட்டு,
மிதமான
தீயில் வைத்து வேகும் வரை
கொதிக்க விடவும்.
ஒன்றுடன்
ஒன்று ஒட்டிக் கொள்ளாமல்
கவனமாக,
பாத்திரத்தில்
இரண்டு பக்கமும் பிடித்து
சுழற்றி விடவும்.
இப்போது
வெல்லக் கரைசல்,
மேலும்
கெட்டியாகி இருக்கும்.
கோதுமை
மாவு நீளத்துண்டுகள் நன்றாக
வெந்து வெல்லக் கரைசலுடன்
கலந்த்தும் வறுத்து வைத்துள்ள
ஏலக்காய் பொடி,
கசகசா,
முந்திரிப்பருப்பு,
கொப்பறை
துண்டுகள் இவற்றை சேர்த்து
குலுக்கி விட்டபின் இறக்கி,
பரிமாறவும்.