Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 4536 Likes :
Ingredients
இறால் 30
பெரியவெங்காயம் 1
பச்சைமிளகாய் 3
இஞ்சி—பூண்டுஅரைத்தது 1 மேஜைக்கரண்டி
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் 3 சிட்டிகை
தனியாத்தூள்அரைதேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கொத்தமல்லிஇலை 1 தேக்கரண்டி
கரம்மஸாலாத்தூள் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
உப்புதேவையானஅளவு
இதயம்நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
Preparation Method
இறாலுடன் உப்புத்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி—பூண்டு அரைத்தது சேர்த்து, கலந்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கியபின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.
அதன்பின் இறாலை போட்டு 1 நிமிடம் வதக்கியபின் தனியாத்தூள் போட்டு கிளறவும்.
7 நிமிடங்கள் வரை தொடர்ந்து கிளறவும்.
உப்பு சரி பார்த்து போட்டுக் கொள்ளவும்.
இறால் வெந்து, சிவக்க வதங்கியதும், கரம்மஸாலாத்தூள் மற்றும் கொத்தமல்லி இலை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.