Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 4892 Likes :
Ingredients
பாஸ்மதி அரிசி 500 கிராம்
மீன் துண்டுகள் 8
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 1
இஞ்சி—பூண்டு அரைத்தது 2 மேஜைக்கரண்டி
தக்காளி 2
கொத்தமல்லி இலை 3 மேஜைக்கரண்டி
புதினா இலை 3 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
தனியாத்தூள் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள்அரை தேக்கரண்டி + அரை தேக்கரண்டி
தயிர் அரை கப்
சீரகம் 1 தேக்கரண்டி
கிராம்பு 5
பட்டை 2 துண்டு
ஏலக்காய் 3
பிரியாணி இலை 1
அன்னாசிப்பூ 1
முந்திரிப்பருப்பு 10
மிளகுத்தூள் அரை தேக்கரண்டி
உப்பு தேவையானஅளவு
இதயம்நல்லெண்ணெய் 50 மில்லிலிட்டர்
Preparation Method
பாஸ்மதி அரிசியை ஊற வைத்துக் கொள்ளவும்.
மீன் துண்டுகள் சிறியதாக நறுக்கப்பட்டிருக்க வேண்டும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
மீன் துண்டுகளுடன் உப்புத்தூள், 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள் இவற்றைக் கலந்து ஊற விடவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
முந்திரிப்பருப்பை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ போட்டு வதக்கியபின் வெங்காயம் போட்டு பொன் நிறமாக வதக்கவும்.
வதக்கியபின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
அதன்பின் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
பச்சை மிளகாய் வதங்கியபின் தக்காளி அரைத்தது, மீதமுள்ள மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், தயிர் இவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கிய கலவை கெட்டியானதும் கொத்தமல்லி இலை போட்டு 1 நிமிடம் வதக்கவும்.