ரைஸ் சூப் வித் ஃபிஷ்

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2817
Likes :

Preparation Method

  • அரிசியை வேக வைத்து, தனியே வைக்கவும்.
  • பூண்டை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டைப் போட்டு சிவக்க வதக்கி, எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
  • அகலமான பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி, கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் வேக வைத்த அரிசி, மா இஞ்சி, உப்பு, மிளகுத்தூள், இவற்றைப் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • அதன்பின், மீன் துண்டுகளைப் போட்டு மேலும் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • அதன்பின் ஸிலேரி, ஃபிஷ் ஸாஸ் சேர்க்கவும்.
  • சேர்த்தபின் செங்காயத்தாள் மற்றும் வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதி, கொத்தமல்லி இலை, சில்லி வினிகர், வறுத்து வைத்துள்ள பூண்டு இவற்றை சேர்த்துக் கிளறி இறக்கி, சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.
  • ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

சில்லி வினிகர் (Chilli Vinegar) செய்முறை:
  • 4 பச்சை மிளகாய் அல்லது சிகப்பு மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ½ கப் ஸிடெர் வினிகருடன் (Chilli Vinegar) மிளகாய் துண்டுகளைப் போட்டுக் கிளறிக் கொள்ளவும்.
  • விரும்பினால் ரைஸ் சூப் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம்.

You Might Also Like

Engineered By ZITIMA