பட்டாணி சூப்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3031
Likes :

Preparation Method

  • வெங்காயம், கேரட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
  • குக்கரில் 1 கப் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய காய்கறிகளைப் போட்டு, வெயிட் போடவும்.
  • விசில் கேட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அதன்பின் வடிகட்டிக் கொள்ளவும் (Stock Water).
  • காய்கறி வேக வைத்த தண்ணீருடன் (Stock Water) பட்டாணி, சேர்த்து வெந்ததும் இறக்கி, தனியே வைக்கவும்.
  • முட்டை கோஸ் மற்றும் கேரட்டை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் காய்கறிகளைப் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
  • வதங்கியபின் பட்டாணி, காய்கறி வேக வைத்த தண்ணீருடன் (Stock Water) சேர்க்கவும்.
  • ஸோயா ஸாஸ், மிளகுத்தூள், சர்க்கரை, வினிகர், உப்பு, அஜ்—னு—மோட்டோ சேர்த்துக் கலக்கவும்.
  • சோளமாவை தண்ணீருடன் கலந்து மேற்கூறிய கலவையில் ஊற்றிக் கிளறி சூடேற்றவும்.
  • 3 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி, பரிமாறவும்.

You Might Also Like

Engineered By ZITIMA