நூடுல்ஸ் சூப்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 4533
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நூடுல்ஸ் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து வேக வைத்து, தண்ணீரை வடிகட்டவும். வடிகட்டிய தண்ணீரை எடுத்து வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நூடுல்ஸைப் போட்டு, லைட் பொன் நிறமாக பொரித்து, எடுத்து தனியே வைக்கவும்.
  • காளானை சுத்தம் செய்துக் கொள்ளவும்.
  • குடமிளகாய், வெங்காயம், கேரட், காளான், பூண்டு இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் வெண்ணெய் போட்டு, லேஸாக உருகியதும், பூண்டைப் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • நறுக்கிய காய்கறிகள், ப்ரோகாலி பூக்கள், காளான் இவற்றை வரிசையாகப் போட்டு வதக்கவும்.
  • நூடுல்ஸ் வேக வைத்த தண்ணீர், உப்பு சேர்க்கவும்.
  • காய்கறிகள் வெந்ததும் ஸோயா ஸாஸ், வினிகர், மிளகுத்தூள், சோளமாவு இவற்றைப் போட்டுக் கிளறி விடவும்.
  • வேக வைத்துள்ள நூடுல்ஸைப் போட்டு, சூப் கிண்ணத்தில் ஊற்றி, பரிமாறலாம்.

 

 

You Might Also Like

Engineered By ZITIMA