Preparation Time: 2 மணி நேரம் 15 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 7808 Likes :
Ingredients
கடலைப்பருப்பு 500 கிராம்
கொத்தமல்லி இலை 2 மேஜைக்கரண்டி
புதினா இலை 2 மேஜைக்கரண்டி
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
இஞ்சி 2 அங்குலம்
பூண்டு 8 பல்
பச்சை மிளகாய் 4
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
கரம்மஸாலாத்தூள் 3 சிட்டிகை
சோம்பு 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 1
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 500 மில்லி லிட்டர்
Preparation Method
கடலைப்பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
அதன்பின், ஊறிய கடலைப்பருப்பில் 1 மேஜைக்கரண்டி எடுத்து வைக்கவும்.
கடலைப்பருப்பை தண்ணீர் சேர்க்காமல் உப்பு சேர்த்து கெட்டியாக ஆட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும்.
பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
ஆட்டி வைத்துள்ள கடலைப்பருப்புடன் அரைத்த இஞ்சிக்கலவை, சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கரம்மஸாலாத்தூள், மஞ்சள்தூள் இவற்றைக் கலந்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பு கலவையிலிருந்து சிறிதளவு கையில் எடுத்து, உள்ளங்கையில் வைத்து வடை போல தட்டையாக தட்டி எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
இதுபோல எல்லா மாவிலும் வடைகள் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.