கடல் உணவு ஃப்ரைட் ரைஸ்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 25 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 8094
Likes :

Preparation Method

  • அரிசியை வேக வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • குடமிளகாயை முக்கோண வடிவமாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டு, ஸிலேரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டை வதக்கவும்.
  • காளானைப் போட்டு வதக்கவும்.
  • வதக்கியதும் முட்டைக் கலவையை ஊற்றி, கிளறி முட்டை தூளாகும் (Scrumble) அளவு கிளறி, இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இறால் போட்டு வேகும் வரை வதக்கவும்.
  • அதன்பின் மீன் துண்டுகள், நண்டின் சதைப்பகுதி இவற்றை போட்டு, மெதுவாகக் கிளறி விடவும்.
  • ஸோயா ஸாஸ், உப்புத்தூள், ஸிலேரி சேர்த்துக் கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அதன்பின் வேக வைத்த சாதம், வதக்கிய கடல் உணவு வகைகள், வதக்கிய வெங்காயம் — முட்டை கலவை வெங்காயத்தாள் இவற்றை சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA