இறால் சாலட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 18451
Likes :

Preparation Method

  • இறால் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • புதினா இலை மற்றும் வெங்காயத்தாளை நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பாத்திரம் அல்லது Sauce Pan—ல் தண்ணீர் ஊற்றி கறிவேப்பிலை போட்டு, கொதிக்க வைக்கவும்.
  • கொதித்ததும் இறாலை போட்டு, இறால் வெந்ததும் தண்ணீரை வடிகட்டி ஆற விடவும்.
  • ஒரு கிண்ணத்தில் (Bowl) புதினா, கொத்தமல்லி, இஞ்சி, வெங்காயம், பூண்டு அரைத்தது, வெங்காயத்தாள், பட்டாணி, இறால், தேங்காய்த்துறுவல், சீரகப் பொடி, உப்புத்தூள் இவற்றைப் போடவும்.
  • அதன்பின் வினிகர் மற்றும் இதயம் நல்லெண்ணெய் சேர்க்கவும்.
  • சேர்த்தபின் கடைசியாக எலுமிச்சைச்சாறு சேர்த்து மெதுவாக கிளறி, ஃப்ரிட்ஜ்—ல் 2 மணி நேரம் வைத்திருந்த பின் சாட் மஸாலா தூவி பரிமாறவும்.

 

Engineered By ZITIMA