சிக்கன் ஸேலட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 4258
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளுடன் டெரியாக்கி ஸாஸ் (Teriyaki Sauce) சேர்த்து, கலந்து ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.
  • தக்காளி, வெங்காயம், jalapeno, கொத்தமல்லி இலை இவற்றை பொடியாக நறுக்கி ஒரு சிறிய பாத்திரத்தில் (Bowl) போட்டு ஃப்ரிட்ஜ்ல் வைக்கவும்.
  • வேறு ஒரு சிறிய பாத்திரத்தில் (Small Bowl) கடுகு, தேன், சர்க்கரை, இதயம் நல்லெண்ணெய், வினிகர், உப்புத்தூள், எலுமிச்சைச்சாறு இவற்றைப் போட்டு ஃப்ரிட்ஜ்ல் வைக்கவும்.
  • முன்கூட்டியே சூடேற்றப்பட்ட அவன்ல் (Oven) சிக்கனை க்ரில் (grill) செய்யவும்.
  • கோழிக்கறியின் ஒவ்வொரு பக்கமும் சுமார் 8 நிமிடங்கள் க்ரில் செய்யவும்.
  • ஒரு தட்டில் நறுக்கிய பொருட்களைப் போடவும்.
  • அதன்பின் தேன் கலவையை சேர்த்துக் கொள்ளவும்.
  • க்ரில் செய்த கோழிக்கறியை சேர்த்து கலந்து அதன்பின் பரிமாறவும்.

 

Engineered By ZITIMA