Preparation Time: 25 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 5694 Likes :
Ingredients
பச்சரிசி அல்லது பாஸ்மதி அரிசி 500 கிராம்
தக்காளி 500 கிராம்
பெரிய வெங்காயம் 3
இஞ்சி — பூண்டு அரைத்தது 3 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை 5 மேஜைக்கரண்டி
புதினா இலை 5 மேஜைக்கரண்டி
பட்டை 3 துண்டுகள்
கிராம்பு 4
ஏலக்காய் 3
தேங்காய் 1 மூடி
பச்சை மிளகாய் 8
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
நெய் 3 மேஜைக்கரண்டி
Preparation Method
அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரை வடிய வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை கையினால் கசக்கி, சாறை தனியாக வைத்து, வெளிப்பகுதியை அரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயின் நடுவில் கீறிக் கொள்ளவும்.
தேங்காயை துறுவி, பால் எடுத்துக் கொள்ளவும்.
முதலில் எடுத்த தக்காளி சாறு, அரைத்து எடுத்த தக்காளி சாறு, தேங்காய்ப்பால் அனைத்தும் சேர்ந்து 5 கப் இருக்க வேண்டும் (குறைவாக இருந்தால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்).
கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
வதக்கியபின் கொத்தமல்லி, புதினா போட்டு வதக்கவும்.
தக்காளி சாறு, தேங்காய் பால் கலவை ஊற்றி, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
கொதித்ததும் அரிசியைப் போட்டுக் கிளறவும்.
மூடி வைக்கவும்.
சுமார் 10 நிமிடங்கள் ஆனதும் திறந்து நெய் ஊற்றி கிளறி மூடி வைக்கவும்.
அரிசி வெந்து, தயாரானதும் இறக்கி வைத்து, 5 நிமிடங்கள் கழித்து எடுத்து பரிமாறவும்.