புளியோதரை

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 25 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 8570
Likes :

Preparation Method

  • அரிசியை உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்து, ஆற விடவும்.
  • சிகப்பு மிளகாயை கிள்ளி வைக்கவும்.
  • பூண்டை உரித்து முழுதாக வைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் போட்டுத் தாளித்து பூண்டைப் போட்டு வதக்கவும்.
  • பூண்டு நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் போட்டுக் கிளறி விடவும்.
  • புளிக்கரைசல் கெட்டியானதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஆற வைத்துள்ள சாதத்துடன் புளிக்கலவையை ஊற்றி, நன்றாக கிளறியபின் பரிமாறவும்.
Engineered By ZITIMA