இறால் ஃப்ரைட் ரைஸ்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3631
Likes :

Preparation Method

 

  • அரிசியை குழையாமல் வேக வைத்து, வடித்துக் கொள்ளவும்.
  • இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • கேரட், பூண்டு, இஞ்சி இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் (Wok) இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டு மற்றும் இஞ்சி போட்டு வதக்கவும்.
  • வதங்கும்பொழுது 3 சொட்டுகள் வினிகர் சேர்க்கவும்.
  • அதன்பின் கேரட் போட்டு வதக்கவும்.
  • கேரட் வதங்கியபின், இறால் போட்டு வதக்கி, ரெட் சில்லி ஸாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்து, இறால் வேகும் வரை வதக்கவும்.
  • அதன்பிறகு பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • வேக வைத்த சாதத்தைப் போட்டு இவற்றை சேர்த்து, வினிகர், ஸோயா ஸாஸ், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
  • 3 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வதக்கியபின் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA