Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 3316 Likes :
Ingredients
பாஸ்மதி அரிசி 500 கிராம்
உரித்த பட்டாணி 100 கிராம்
கொத்தமல்லி இலை 2 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் 2
பச்சை மிளகாய் 8
தேங்காய்த்துறுவல் 5 மேஜைக்கரண்டி
பட்டை 2 துண்டு
கிராம்பு 3
ஏலக்காய் 2
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
நெய் 1 மேஜைக்கரண்டி
Preparation Method
அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயின் நடுவில் கீறிக் கொள்ளவும்.
தேங்காய் துறுவலில் 2 கப் பால் எடுத்துக் கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
பட்டாணியைப் போட்டு வதக்கவும்.
5 நிமிடங்கள் வதங்கயிதும் தேங்காய்பால் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறவும்.
கொதித்ததும் அரிசியைப் போடவும்.
நன்றாகக் கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைக்கவும்.
சுமார் 15 நிமிடங்கள் கழித்து, மூடியைத் திறந்து கொத்தமல்லி இலை போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.