இறால்—அவரை மஸாலா

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6771
Likes :

Preparation Method

  • இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • அவரைக்காயை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்கயாத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவில் கீறிக் கொள்ளவும்.
  • தக்காளியை 5 நிமிடங்கள் சுடு தண்ணீரில் போட்டு, வைத்து, அதன்பின் மேல் தோலை நீக்கிவிட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிப்பு வடகத்தை உதிரித்து போட்டு, தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இறால் போட்டுக் கிளறவும்.
  • கிளறியபின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு வதக்கவும்.
  • 10 நிமிடங்கள் வதங்கியதும் அவரைக்காயைப் போட்டு வதக்கவும்.
  • தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தக்காளி அரைத்தது போட்டு கிளறவும்.
  • உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
  • இறாலும், அவரைக்காயும் வெந்து வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA