இறால் கட்லெட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 5048
Likes :

Preparation Method

  • இறாலை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • முட்டையுடன் உப்புத்தூள் சேர்த்து அடித்து வைத்துக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கியபின் உப்புத்தூள் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கி ஆறவிடவும்.
  • நறுக்கிய இறாலுடன், மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, வெங்காயம், இஞ்சி—பூண்டு அரைத்தது வதக்கியது, மிளகாய்த்தூள், வினிகர் இவற்றை கலந்து கொள்ளவும்.
  • உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
  • இறால் கலவையை கட்லெட் வடிவங்களாக செய்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கட்லெட்டை முட்டையில் நனைத்து, ரஸ்க்தூளில், புரட்டியபின் எண்ணெய்யில் போட்டு, சிவக்க பொரித்து எடுத்து பரிமாறவும்.

 

Engineered By ZITIMA