Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 3118 Likes :
Ingredients
இறால் 500 கிராம்
உருளைக்கிழங்கு 3
சீஸ்ஸாஸ்ஒன்றரைகப்
சீஸ்துறுவல் 100 கிராம்
வெண்ணெய் ஒன்றரைமேஜைக்கரண்டி
தக்காளி 2
சில்லிஸாஸ்(Chilli Sauce) 1 மேஜைக்கரண்டி
பெரியவெங்காயம் 2
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
கடுகு அரைதேக்கரண்டி
கொத்தமல்லிஇலை 5 மேஜைக்கரண்டி
ஸோயாஸாஸ்(Soy Sauce) 2 தேக்கரண்டி
உப்புதேவையானஅளவு
Preparation Method
இறாலை வேக வைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த இறாலுடன் சில்லி ஸாஸ் மற்றும் கடுகை சேர்த்து கிளறவும்.
கிளறியபின் மிளகுத்தூள் மற்றும் உப்புத்தூள் சேர்த்து கலக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து, உப்புத்தூள் சேர்த்து மசித்தபின் இறால் கலவையுடன் கலந்து கொள்ளவும்.
அதன்பின் சீஸ் ஸாஸ், சீஸ் துறுவல், ஸோயா ஸாஸ் இவற்றை கலந்து கொள்ளவும்.
பரிமாறும் போது அலங்கரிப்பதற்கு வெங்காயம், தக்காளியை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அவன்—ல் (Oven—ல்) வைக்கக் கூடிய தட்டில் வெண்ணெய் தடவிக் கொள்ளவும்.
தட்டில் இறால் கலவையை சமமாக பரப்பி போட்டு வைக்கவும்.
முன் கூட்டியே சூடேற்றப்பட்ட அவன்—ல் (Oven—ல்) வைத்து 200°C உஷ்ணத்தில் சுமார் 5 நிமிடங்கள் வைத்து எடுத்து வெங்காயம் மற்றும் தக்காளி வைத்து அலங்கரித்து பரிமாறவும்.