உருளைக்கிழங்கு—கொத்தமல்லி குழம்பு

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 9279
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கி, அங்கங்கே முள்கரண்டியால் (Fork) குத்தி விடவும்.
  • கொத்தமல்லியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு, தாளித்து நறுக்கிய கொத்தமல்லி இலை போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
  • அதன்பின் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
  • 3 நிமிடங்கள் ஆனதும் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
  • சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். அனைத்தும் கலந்து, வெந்ததும் இறக்கி பரிமாறவும் (கொத்தமல்லி நன்றாக வதங்குவது அவசியம்).
Engineered By ZITIMA