கலவை காய்கறி ஊறுகாய்

Spread The Taste
Serves
2 போட்டல்ஸ்
Preparation Time: 45 நிமிடங்கள்
Cooking Time: 5 டயஸ்
Hits   : 7380
Likes :

Preparation Method

  • மாங்காய், கேரட், பீன்ஸ், கொத்தவரங்காய், பூண்டு, இஞ்சி, 2 எலுமிச்சம்பழம், முருங்கைப்பிஞ்சு, பச்சை மிளகாய், இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சைப் பட்டாணியுடன் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, மீதமுள்ள எலுமிச்சையின் சாற்றைப் பிழிந்து விடவும்.
  • தேவையான உப்புத்தூள், மஞ்சள்தூள் போட்டுக் கலந்து ஊற விடவும்.
  • 4 அல்லது 5 நாட்கள் ஊற வேண்டும்.
  • அதன்பின் கடுகு, பெருங்காயத்தூளை வறுத்துக் கொள்ளவும்.
  • வெந்தயத்தை வறுத்து தூளாக்கிக் கொள்ளவும்.
  • தூளாக்கிய பொருட்கள், மிளகாய்தூள், பெருங்காயத்தூள் போட்டுக் கலந்து, கிளறி விடவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள கடுகு போட்டுத் தாளித்து, காய்கறி கலவையுடன் சேர்த்து, நன்றாகக் கிளறி பாட்டில்களில் எடுத்து வைத்து, தேவையான போது பயன்படுத்தலாம்.
Engineered By ZITIMA