Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 8345 Likes :
Ingredients
கொத்தமல்லி 5 கட்டு
இஞ்சி 2 அங்குலம்
கறிவேப்பிலை 2 ஆர்க்கு
கடலைப்பருப்பு 1 மேஜைக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் 8
புளி 2 கோலி அளவு
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 150 மில்லி லிட்டர்
Preparation Method
கொத்தமல்லியை சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், இஞ்சி, மிளகாய், புளி இவற்றைப் போட்டு வதக்கி இறக்கவும்.
கொத்தமல்லியுடன் வதக்கிய பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து ஆட்டிக் கொள்ளவும்.
வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து அரைத்த கொத்தமல்லிக் கலவையைப் போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கி இறக்கி, பாட்டிலில் எடுத்து வைத்து, தேவையான போது பரிமாறவும்.