Preparation Time: 40 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 8699 Likes :
Ingredients
மைதா மாவு 2 கப்
கோழி கொத்துக்கறி 250 கிராம்
தனியாத்தூள் 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
இஞ்சி அரை அங்குலம்
கிராம்பு 2
பூண்டு 3 பல்
முட்டை 1
பச்சை மிளகாய் 1
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
கொத்தமல்லித் துண்டுகள் 1 மேஜைக்கரண்டி
சீரகம் 2 சிட்டிகை
சோம்பு அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் 2 சிட்டிகை
மிளகாய்த்தூள் அரை தேக்கரண்டி
கரம்மஸாலாத்தூள் 2 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 5 மேஜைக்கரண்டி
Preparation Method
ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, உப்புத்தூள், 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மாவு மிருதுவாகும் வரை (10 நிமிடங்கள் வரை) பிசைந்து கொள்ளவும்.
மாவை துணியால் மூடி 30 நிமிடங்கள் ஊற விடவும். முட்டையை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாக மாவை எடுத்து மைதா மாவு தூவி, சதுர வடிவமாகத் தேய்த்துக் கொள்ளவும்.
இதன் நடுவே தயாரித்து வைத்துள்ள கொத்துக்கறி மஸாலாவில் சிறிதளவு வைத்து இரண்டு விளிம்புகளையும் மடித்து, மறுபடியும் சிறிதளவு மைதாமாவு தூவி மறுபடி சதுர வடிவமாகத் தேய்க்கவும்.
தோசைக்கல்லைக் காய வைத்து பரோட்டாவைப் போட்டு, சுற்றிலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
மெதுவாக திருப்பிப் போட்டு இரண்டு பக்கமும் பொன் நிறமாக சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.