சில்லி பரோட்டா

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 14636
Likes :

Preparation Method

  • தோசைக்கல்லைக் காய வைத்து 1 மேஜைக்ககரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பரோட்டாவைப் போட்டு இரண்டு பக்கமும் பொன் நிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
  • ஆறியதும் சிறு சிறு சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • குடமிளகாயின் விதைகளை நீக்கி விட்டு நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பூண்டை, தோலுடன் ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • இஞ்சியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டு போட்டு பொன் நிறமாக வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சி போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் போட்டு நன்றாக வதங்கியதும், குடமிளகாய் துண்டுகள் போட்டு வதக்கவும்.
  • மிளகாய்த்தூள், கரம் மஸாலாத்தூள், சாம்பார் பொடி இவற்றைப் போட்டுக் கிளறி, சில்லி ஸாஸ் மற்றும் உப்பு சேர்க்கவும்.
  • மிதமான தீயில் வைத்து, அனைத்தும் நன்றாக கலந்து வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள பரோட்டா துண்டுகளைப் போட்டு வதக்கிய பொருட்களும், பரோட்டா துண்டுகளும் நன்றாக வதங்கும் வரை கிளறி விடவும்.
  • தீயைக் கூட்டி வைத்து கொத்தமல்லி இலை, நறுக்கிய கேரட், வெங்காயத்தாள் இவற்றை போட்டுக் கிளறியவுடன் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA