பனீர் டிக்கா மஸாலா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 7564
Likes :

Preparation Method

  • பனீர் துண்டுகளுடன் தயிர், 1½ தேக்கரண்டி இஞ்சி— பூண்டு அரைத்தது, ½ தேக்கரண்டி மிளகாய்த்தூள், 2 சிட்டிகை கரம் மஸாலாத்தூள், 1 சிட்டிகை மஞ்சள்தூள், 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் கசூரிமேத்தி, இவற்றை சேர்த்து, நன்றாகக் கலந்து புரட்டி தனியே வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளி மற்றும் முந்திரிப்பருப்பை வழுவழுப்பாக அரைத்து, தனியே வைக்கவும்.
  • அகன்ற வாணலியில் வெண்ணெய் போட்டு, ஊற வைத்துள்ள பனீர் துண்டுகளைப் போட்டு, ஊற வைப்பதற்காக சேர்த்துள்ள மஸாலா முழுவதும் பொன் நிறமாக வதக்கி, வெங்காயம், குடமிளகாயைப் போட்டு வதக்கிய பிறகு, பனீர் கலவையில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • வேறு வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் பிரியாணி இலை, ஏலக்காய், மீதமுள்ள இஞ்சி, பூண்டு அரைத்தது போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம், தக்காளி, முந்திரிப்பருப்பு அரைத்தது போட்டு மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், உப்பு இவற்றைப் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
  • 1 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், பனீர் கலவை, கசூரி மேத்தி இவற்றைப் போட்டு 1 நிமிடம் வதக்கி, ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் கொத்தமல்லி இலை போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA