Preparation Time: 2 மணி 30 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 10339 Likes :
Ingredients
பனீர் துண்டுகள் 250 கிராம்
பச்சை குடமிளகாய் 1
மஞ்சள் குடமிளகாய் 1
கறுப்பு உப்பு 2 சிட்டிகை
வடிகட்டிய தயிர் 200 கிராம்
இஞ்சி— பூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி
ஓமம் 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
தனியாத்தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 3 சிட்டிகை
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
கரம்மஸாலாத்தூள் 3 சிட்டிகை
ஆம்ச்சூர்பொடி 1 தேக்கரண்டி
சாட்மஸாலாபொடி 1 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
வெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
பனீரை தயாராக வைத்துக் கொள்ளவும்.
2 வண்ண குடமிளகாய்களையும் விதைகளை நீக்கி விட்டு முக்கோண வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் தயிரைப் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
தயிருடன் இஞ்சி—பூண்டு அரைத்தது, ஓமம், கறுப்பு உப்பு, ஆம்ச்சூர்பொடி, உப்பு, எலுமிச்சைச்சாறு, கரம்மஸாலாத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், குடமிளகாய் துண்டுகள், பனீர் துண்டுகள் இவற்றைப் போட்டு கலந்து 2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
அதன்பின் பனீர் கலவையின் குளிர்த்தன்மை நீங்கும் வரை வெளியே எடுத்து வைக்கவும்.
Skewer—ல் குடமிளகாய், பனீர் இரண்டையும் மாறி மாறி வைத்துக் கொள்ளவும்.
அவன்—ஐ (Oven) 1800யில் முன் கூட்டியே சூடாக்கிக் கொள்ளவும்.
அவன்—ல் பயன்படுத்தும் (Rack) அகலமான தட்டில் வெண்ணெய் தடவியபின் பனீர் துண்டுகள் வைத்து skewers—ஐ அடுக்கவும்.
Skewers— வைக்கப்பட்ட தட்டை அவன்—ல் வைக்கவும்.
10 நிமிடங்கள் கழித்து Skewer—ஐ திருப்பி விடவும். மேலும் சிறிதளவு வெண்ணெயை தடவவும். மறுபடியும் 10 நிமிடங்கள் அவன்—ல் (oven) வைத்து எடுக்கவும்.
அதன் பின் பனீர் துண்டுகள், குடமிளகாய் துண்டுகளை ஒரு தட்டில் அடுக்கி வைத்து சாட் மஸாலா தூவியபின் எடுத்து பரிமாறவும்.