பனீர்—தயிர் மஸாலா பிரியாணி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3189
Likes :

Preparation Method

  • அரிசியை உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • பனீர் துண்டுகளுடன் மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு மெதுவாக புரட்டியபின் தயிர், சிறிதளவு உப்புத்தூள் சேர்த்து புரட்டி 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • இஞ்சியை தீக்குச்சி போல நீளமாக, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மிளகு, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.
  • பாலுடன் குங்குமப்பூ கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்து மீதமுள்ள இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கியபின் நறுக்கிய இஞ்சி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் வெந்தயக் கீரையை போட்டு (வெந்தயக் கீரையை அப்போது தான் கழுவி சேர்க்க வேண்டும். கழுவியபின் நீண்ட நேரம் வைத்து பயன்படுத்தக் கூடாது) கிளறவும்.
  • கிளறியபின் பொன்நிறமாக பொரித்த வெங்காயத்தை போடவும்.
  • அதன்பின் கொத்தமல்லி சேர்க்கவும்.
  • ஒரு முறை கிளறியபின் ஊற வைத்துள்ள பனீர் கலவையை சேர்க்கவும்.
  • இதன் மீது வேக வைத்துள்ள சாதத்தைப் போட்டு நெய் ஊற்றவும்.
  • இதன் மீது பாலில் பலந்த குங்குமப்பூ கரைசல் ஊற்றி மூடி வைக்கவும்.
  • தோசைக் கல்லை காய வைத்து பாத்திரத்தை தோசைக்கல் மீது வைத்து 10 நிமிடங்கள் வைக்கவும்.
  • அதன்பின் தீயை மிதமாக்கி 10 நிமிடங்கள் வைத்து இறக்கி, தேவையான போது, மெதுவாக கிளறி விட்டபின் எடுத்து பரிமாறவும்.

 

Engineered By ZITIMA