Preparation Time: 40 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 14803 Likes :
Ingredients
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு 2
பனீர் 1 கப்
கொத்தமல்லி 2 மேஜைக்கரண்டி
சீரகம் அரை தேக்கரண்டி
பச்சைமிளகாய் 1
மைதாமாவு 2 மேஜைக்கரண்டி
இஞ்சி துறுவல் 1 மேஜைக்கரண்டி
உப்புத்தூள் 4 சிட்டிகை
இதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்
குழம்பிற்கு தேவையான பொருட்கள்:
பெருங்காயத்தூள் 2 சிட்டிகை
சீரகம் 1 தேக்கரண்டி
இஞ்சி 1 அங்குலம்
பச்சை மிளகாய் 1
தனியாத்தூள் 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் அரை தேக்கரண்டி
தக்காளி 2
மைதாமாவு 1 தேக்கரண்டி
ஃப்ரெஷ் க்ரீம் (Fresh Cream) 3 மேஜைக்கரண்டி
கரம்மஸாலாத்தூள் 3 சிட்டிகை
கொத்தமல்லி இலை 2 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
கோஃப்தா செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, பிசைந்துக் கொள்ளவும்.
பனீரை பிசைந்து கொள்ளவும்.
கொத்தமல்லியை நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கு, மைதா, பனீர், கொத்தமல்லி, துறுவிய இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றை உப்பு சேர்த்து, பிசைந்து கொள்ளவும்.
கையில் லேஸாக எண்ணெய் தடவிக் கொண்டு சிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகள் செய்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுத்து வைக்கவும்.
குழம்பு செய்முறை:
தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி இவற்றை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
மைதாமாவு, ஃப்ரெஷ் க்ரீம் இரண்டையும் கலந்து, தனியே வைக்கவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து, பெருங்காயத்தூள் போடவும்.
அரைத்து வைத்துள்ள தக்காளி கலவை, தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டுக் கிளறி 4 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
எண்ணெய் மிதந்து, ஓரளவு கெட்டியானதும் கலந்து வைத்துள்ள க்ரீம்—மைதா கலவையை சேர்த்து, 1 கப் தண்ணீர், உப்பு சேர்த்து, மிதமான தீயில் 7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
கரம்மஸாலாத்தூள், கொத்தமல்லி இலை போட்டு ஒரு நிமிடம் ஆனபின் பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களைப் போட்டு ஒரு முறை கொதித்ததும் இறக்கி, பரிமாறவும்.