Preparation Time: 30 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 15244 Likes :
Ingredients
உருளைக்கிழங்கு (பெரியது) 4
பச்சை பட்டாணி (உரித்தது) 50 கிராம்
ரஸ்க் தூள் தேவையான அளவு
சோள மாவு (Corn Flour) 1 மேஜைக்கரண்டி
இஞ்சி 1 அங்குலம்
பச்சை மிளகாய் 2
கரம்மஸாலாத்தூள் 2 சிட்டிகை
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு அல்லது ஆம்ச்சூர் பொடி 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி
சர்க்கரை (Sugar) தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்
Preparation Method
உருளைக்கிழங்கை வேக வைத்து உப்பு சேர்த்து, மசித்துக் கொள்ளவும்.
பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
இஞ்சியை, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு, பட்டாணி நான்கு மேஜைக்கரண்டி ரஸ்க்தூள், சோளமாவு, இஞ்சி, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், கரம்மஸாலாத்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, உப்பு இவற்றைப் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும்.
இந்தக் கலவையில் இருந்து இரண்டு பாகங்களாகப் பிரித்து அவற்றை உருண்டைகள் செய்து கொள்ளவும்.
ஒரு தட்டில் ரஸ்க்தூளை எடுத்து கொள்ளவும்.
உருண்டையை அரை அங்குல பருமனாகத் தட்டி, ரஸ்க் தூளில் புரட்டி பட்டியாக செய்து கொள்ளவும். இது போல எல்லா உருளைக்கிழங்கு கலவையிலும் பட்டிகள் தயார் செய்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டிகளைப் போட்டுப் பொன் நிறமாகப் பொரித்து எடுத்து பரிமாறவும்.