கார மஸாலா மட்டன்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 8733
Likes :

Preparation Method

  • கறியை சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சியை துறுவிக் கொள்ளவும்.
  • துறுவிய இஞ்சியில் பாதி அளவு, உப்பு இவற்றுடன் கறித் துண்டுகளைப் போட்டு 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • 1 ஏலக்காய், 1 பட்டை, மிளகு, 3 சிகப்பு மிளகாய், பூண்டு, 1 கிராம்பு, சின்ன வெங்காயம் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலி அல்லது கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி துறுவல், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் கறித்துண்டுகளைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • வதக்கியபின் அரைத்த மஸாலா, மஞ்சள்தூள் போட்டு மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • அதன்பின் கறி வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
  • கறி வெந்து, மஸாலா கெட்டியானதும் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி, பரிமாறவும்.
Engineered By ZITIMA