கல்கத்தா ரஸகுல்லா

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 12039
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் எலுமிச்சைச்சாறு ஊற்றி, கிளறி விடவும்.
  • சுமார் 10 நிமிடங்கள் ஆனதும் பால் திரிந்து, பால் தனியே, தண்ணீர் தனியே, பிரிந்து இருக்கும்.
  • இப்போது ஒரு பாத்திரத்தின் மீது மெல்லிய வெள்ளைத் துணி போட்டு திரிந்த பாலை ஊற்றி, வடி கட்டவும்.
  • எலுமிச்சைச்சாறு பிழிந்தபடியால் ஏற்படும் புளிப்பு சுவை நீங்குவதற்காக வடிகட்டிய திரிந்த பாலில் (துணியில் நிற்கும்) சிறிதளவு தண்ணீர் தெளித்து கிளறி, மறுபடியும் நன்றாக, துளி கூட தண்ணீர் இன்றி பிழிந்து விடவும்.
  • அதன்பின் பூரிப்பலகை, மீது வைத்து, 10 நிமிடங்கள் மாவில் விரிசல் இல்லாமல் மென்மையாக, 10 நிமிடங்கள் பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க வைத்து சர்க்கரை சேர்க்கவும்.
  • சர்க்கரை கரைந்ததும் இறக்கி வைக்கவும்.
  • திரிந்த பாலை மாவு போல பிசைந்துள்ளதில், உருண்டைகள் செய்து கொள்ளவும்.
  • மறுபடியும் சர்க்கரைத் தண்ணீரை சூடேற்றவும்.
  • செய்து வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு மூடி வைத்து 20 நிமிடங்கள் வேக விடவும்.
  • நன்றாக ஊறியபின் பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Indian Regional Recipes

  • கல்கத்தா ரஸகுல்லா

    View Recipe
Engineered By ZITIMA