ஸ்டஃப்ட் ஆலு குல்ச்சா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 4943
Likes :

Preparation Method

  • வெது வெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட் கலந்து 5 நிமிடங்கள் ஊற விடவும்.
  • அதன்பின் மைதாமாவு, உப்புத்தூள், நெய், ஈஸ்ட் கலந்த தண்ணீர் இவற்றைக் கலந்து பூரி மாவு போல பிசைந்து, மூடி 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • தனியாவை ஒன்றிரண்டாக தூளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி இறக்கிக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, உப்புத்தூள், கொத்தமல்லி இலை, ஆம்ச்சூர் பவுடர், மிளகாய்த்தூள், தனியாத்தூள், எலுமிச்சைச்சாறு, வதக்கிய வெங்காயம், சர்க்கரை இவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • பூரிப்பலகையில் மைதாவை வட்டமாக தேய்க்கவும். இதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து வைத்து மூடி, சிறிதளவு மைதாமாவு தூவி மறுபடியும் வட்டமாக தேய்க்கவும்.
  • இதுபோல, பிசைந்து வைத்த மாவில் வட்டங்கள் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து ஒவ்வொரு வட்டத்தையும் போட்டு, சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA