ஒரு பாகத்தை தனியாக வைத்துள்ள மாவில் புரட்டிக் கொள்ளவும்.
கையில் சிறிதளவு எண்ணெய் தடவிக் கொள்ளவும்.
மாவில் புரட்டிய பாகத்தை பூரிப்பலகையில் வைத்து மிக மெல்லிய வட்டமாக தேய்க்கவும்.
இதன்மீது சிறிதளவு எண்ணெய் தடவவும். சிறிதளவு மாவு பரவலாக தூவவும்.
அதன்பின் இரண்டு கைகளாலும் வட்டத்தைப் பிடித்து சிறு சிறு விசிறி மடிப்புகள் போல செய்து, இரண்டு முனைகளையும் ஒன்று சேர்ப்பது போல உருட்டி ஒரு முனையை நடுவில் வைத்து, இதன்மீது அடுத்த முனையை வைத்து லேஸாக அழுத்தி, பொருத்தவும்.
இதை மறுபடியும் மாவில் புரட்டி பூரிப்பலகை மீது வைத்து அதிகப்பட்சம் 7 அங்குலத்திற்கு வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
இதுபோல மீதமுள்ள 3 பாகங்களிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காய வைத்து தேய்த்த வட்டங்களில் ஒன்றை எடுத்து, போட்டு, இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, மெதுவாக திருப்பிப் போட்டு, அதன்பின் மறுபடியும் திருப்பிப் போட்டு, நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.
இதுபோல மீதமுள்ள 3 பாகங்களையும் செய்து, லேயர் சப்பாத்திகள் தயாரித்து, பரிமாறவும்.