Preparation Time: 2 மணி நேரம் 20 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 7234 Likes :
Ingredients
துவரம்பருப்பு 200 கிராம்
புழுங்கல் அரிசி 400 கிராம்
பச்சை மிளகாய் 5
தேங்காய்த்துறுவல் 2 மேஜைக்கரண்டி
பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
சமையல் சோடா 3 சிட்டிகை
கடுகு அரை தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
துவரம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
இரண்டையும் ஆட்டும் பொழுது தேங்காய்த்துறுவல், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் இவற்றை சேர்த்து சற்று கரகரப்பாக ஆட்டி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
காலையில் வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து மாவுடன் சேர்த்து கலந்து, சமையல் சோடாவும் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
இட்லி தட்டுகளில் இதயம் நல்லெண்ணெய் தடவி, மாவை ஊற்றி வேக வைத்து, எடுத்து பரிமாறவும்.