கோவில்பட்டி கடலை மிட்டாய்

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 9430
Likes :

Preparation Method

  • வறுகடலையில் தோல் இருந்தால் நீக்கி, கொள்ளவும்.
  • பாத்திரத்தில் 4 மேஜைக்கரண்டி தண்ணீர் ஊற்றி, வெல்லத்தூளைப் போட்டுக் கரைத்து வடிகட்டவும்.
  • அதன்பின் அடிகனமான பாத்திரத்தில் வெல்லக் கரைசலை ஊற்றி, மிதமான தீயில் வைத்து, வெல்லக் கரைசல் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
  • சிறிதளவு தண்ணீரில் சில சொட்டுகள் வெல்லப்பாகு ஊற்றினால் அவை கையில் ஒட்டாமல் உருண்டையாக, பளபளவென இருந்தால் அதுதான் சரியான பக்குவம்.
  • இவ்விதம் பக்குவம் ஆனதும் வறுகடலையை போட்டு நன்றாக கிளறி 1 நிமிடம் ஆனபின் இறக்கி, நெய் தடவிய தட்டில் போட்டு, விரல்களில் நெய் தடவி, கடலை கலவையை லேஸாக அழுத்தியபின் உருண்டைகளாக செய்யவும் அல்லது கத்தியால் சதுர வடிவ துண்டுகளாக நறுக்கி, எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA