Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 40 நிமிடங்கள்
Hits : 9305 Likes :
Ingredients
ஆட்டுக்கறி 500 கிராம்
பாஸ்மதி அரிசி 250 கிராம்
பிரியாணி இலை 3
மிளகு 1 தேக்கரண்டி
ஏலக்காய் 6
பட்டை 3 துண்டு
கிராம்பு 6
இஞ்சி அரைத்தது 1 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் 5
சீரகம் 1 தேக்கரண்டி
பூண்டு அரைத்தது 1 மேஜைக்கரண்டி
மிளகாத்தூள் 1 மேஜைக்கரண்டி
தயிர் 1 கப்
கொத்தமல்லி இலை 2 மேஜைக்கரண்டி
புதினா இலை 2 மேஜைக்கரண்டி
கறுப்பு ஏலக்காய் 2
குங்குமப்பூ 2 சிட்டிகை
பால் 3 மேஜைக்கரண்டி
நெய் 5 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 100 மில்லி லிட்டர்
Preparation Method
பாத்திரத்தில் 6 கப் தண்ணீர், பிரியாணி இலை, 3 ஏலக்காய், 8 மிளகு, 1 துண்டு பட்டை, உப்பு இவற்றை போட்டு, கொதித்ததும் அரிசியைப் போட்டு முக்கால் வேக்காடாக வேக வைத்து தண்ணீரை வடித்தபின், தனியே வைக்கவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தில் பாதி அளவைப் போட்டு பொன் நிறமாக வறுத்து எடுத்து எண்ணெய் உறிஞ்சும் தாளில் வைக்கவும்.
மீதமுள்ள மிளகு, 1 துண்டு பட்டை, மிளகு, 2 ஏலக்காய், சீரகம் மற்றும் 3 கிராம்பு இவற்றை தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.
குங்குமப்பூவை பாலில் கலந்து வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் கறித்துண்டுகள், இஞ்சி அரைத்தது, பூண்டு அரைத்தது, தயிர், 1 மேஜைக்கரண்டி கொத்தமல்லி இலை, 1 மேஜைக்கரண்டி புதினா, மிளகாய்த்தூள், தூளாக்கிய பொருட்கள், உப்பு, வறுத்து வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவு இவற்றைப் போட்டு 2 மணி நேரம் ஃப்ரிட்ஜ் — ல் (Fridge) வைத்து ஊற விடவும்.
வேறு வாணலியில் 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள பட்டை, ஏலக்காய், கறுப்பு ஏலக்காய், கிராம்பு இவற்றைப் போட்டு வதக்கவும்.
அதன்பின் மீதமுள்ள வெங்காயம் போட்டு வதக்கியபின் ஊற வைத்துள்ள கறித் துண்டுகளைப் போட்டுக் கிளறி, மிதமான தீயில் வைத்து கறியை வேக வைத்து இறக்கி கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில், மீதமுள்ள நெய்யை பரவலாகத் தடவி, வேக வைத்துள்ள சாதத்தில் பாதி அளவைப் பரவலாக போடவும்.
இதன் மீது கறிக்கலவை, கொத்தமல்லிஇலை, புதினா இலையைப் போடவும்.
இதன்மீது மீதமுள்ள சாதம் மற்றும் பாலில் கரைத்து வைத்துள்ள குங்குமப்பூ சேர்த்து மூடி, மிதமான தீயில் வைத்து சாதம் மற்றும் கறி முழுமையாக வெந்ததும் இறக்கி பரிமாறவும்.